காங்கிரஸ் கட்சியை பிளக்க பாஜக தலைவர் எடுத்த அஸ்திரம்! கடுப்பான காங்கிரஸ் தலைவர்!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சிக்கு அண்மைக்காலமாக மிகப்பெரிய தலைவலியாக இருப்பது, அந்த கட்சியின் மூத்த தலைவர்களான பா சிதம்பரமும், டிகே சிவகுமாரும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆல் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் இருக்கிறார்கள் என்பதுதான். 

இதில் சிவகுமார்  பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை 9 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருக்க காரணமே கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் தற்போது காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவராக இருக்கும் சித்தராமையா தான் என, தற்போது மாநில பாஜக தலைவராக இருக்கும் நலின் குமார் கட்டில் தெரிவித்து ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார். 

சிவகுமாரின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரை வஞ்சம் தீர்க்கவே சித்தராமையா தான் அவரை சிக்க வைத்துள்ளார் என நாளின் குமார் கட்டில் தெரிவித்துள்ளார்.  மேலும் இது குறித்து சித்தராமையா பேசுகையில், இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட தகவல் எனவும், இதில் துளி கூட உண்மையில்லை எனவும், முற்றிலும் தவறான தகவல் எனவும், அவருக்கு குறைந்தபட்ச  பொது அறிவு கூட இல்லை எனவும் சித்தராமையா நாளின் குமார் கட்டிலை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். 

சிவகுமார் தலைமையில் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக, அந்த மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாறாமல் இருக்க, 44 பேரை தன்னுடைய சொந்த செலவில் கர்நாடகாவில் அழைத்து வந்து தங்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka political crisis about dk shivakumar arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->