எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திமுக எம்பி கனிமொழி!   - Seithipunal
Seithipunal


திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்ல இருக்கும் நிலையில், அவர் ஏற்கனவே திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். 

தற்போது மக்களவை உறுப்பினராக அவர் பதவி ஏற்பதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். வருகின்ற ஜூலை 24 ஆம்  தேதி வரை அவருடைய பதவி காலம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக மாநிலங்களவை தலைவராக இருந்த கனிமொழி தற்போது திமுக மக்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை தலைவராக திருச்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

கனிமொழியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக மாநிலங்களவை அலுவலகம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi resigned her rajyasabha mp post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->