மக்களவை தேர்தலில் நானும் இல்லை கட்சியும் இல்லை: கமல்ஹாசன் சொன்ன அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்று மதியம் 1 மணி அளவில் வந்தார். அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.

பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற மேல் சபை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டது. 

அதன் உடன்பாட்டில் முதலமைச்சர் மற்றும் கமலஹாசன் கையெழுத்திட்டனர். இந்த உடன்பாட்டில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எங்கள் கட்சி சார்பிலும் வேறு யாரும் போட்டியிடவில்லை.

இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு எங்களது முழு ஒத்துழைப்பும் உள்ளது. இது பதவிக்கான விஷயம் அல்ல நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கைகுலுக்க வேண்டுமோ அங்கு கைக்குலுக்கி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->