"63 வயது இளைஞர்" அமைச்சர் மா.சுப்ரமணியனை புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி நடக்கயிருக்கும் கலைஞர் நினைவு பன்னாட்டு மரத்தான் போட்டிகளுக்கான முன்பதிவு தொடக்க விழா  இன்று தொடங்கியது .

இந்த விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் மா. சுப்பிரமணியம், காந்தி  சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர்  முன்பதிவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் "சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்திற்கு 63 வயதாகிறது என்றால் யாராலும் நம்ப முடிகிறதா? அவர் அந்த அளவுக்கு தன்னுடைய உஞலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறார். அவர் எந்த மாவட்டத்திற்கு  சுற்றுப் பயணம் சென்றாலும் தன்னுடைய ஓட்ட பயிற்சியை தொடர்ந்து கடைப்பிடித்து வருபவர். பாவம் இவரால் அரசு அதிகாரிகளும் ஓட வேண்டி இருக்கிறது என நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் "சர்க்கரை வியாதி வந்து விட்டால் வாழ்க்கையே முடிந்தது என ஊக்கப்படுத்தும் நண்பர்கள் எனக்கும் இருந்தார்கள். இதுவரை 139 மாரத்தன் போட்டிகளில் ஓடியிருக்கிறேன் உடற்பயிற்சியை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஓடுகிறேன். வயதான  காலத்தில் நானே ஓடும்போது  இளைஞர்களாகிய உங்களால் ஓட முடியாதா? இது உங்களுக்கும் சாத்தியமே" என உற்சாகமுடன் பேசினார் அமைச்சர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalaingar memorial marathon registration oening function udhayanithi and ma subramaiyan spech


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->