முதலமைச்சர் குறித்தும், கூவத்தூர் சம்பவம் குறித்தும் அதிமுக அமைச்சர் பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனைத்து சமூக மக்கள் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் அமைச்சருக்கு மலர் கிரீடம் அணிவித்து, வேல் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தெய்வத்தினால் நான் தப்பித்தேன். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். நான் அமைச்சரானது கூட தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஜெயலலிதா இறந்த பிறகு இந்த ஆட்சி நீடிக்குமா.? தாங்குமா? என்றெல்லாம் மக்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கும் இந்த எண்ணம்தான் இருந்தது. 

ஒரு பக்கம் 18 எம்எல்ஏக்கள் போனார்கள், இன்னொரு பக்கம் 11 எம்எல்ஏக்கள் போனார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த ஆட்சி போய்விடும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். காரணம் அன்றைய சூழ்நிலை இப்படி இருந்தது. ஒவ்வொருவரையும் பிடித்து வைத்து கூவத்தூரில் பட்ட பாடு பெரிய பாடு என கூறி சிரித்தார்.

 மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியாக வேண்டும். எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலு,ம் அறிவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. இதற்கு முன் தேர்தல் வந்தால் வேறு யாரும் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிலைப்பாடு, அவருடைய நிர்வாகத் நிர்வாகத்தின் காரணமாக அதிமுகதான் வெற்றி பெறும் என்ற நிலை வந்துள்ளது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju says about edappadi palanisamy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->