அதிமுக கூட்டணியில் கிளம்பிய புயல்.. வெடிக்கும் சர்ச்சை.. அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி யில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக தான் முடிவு செய்யும். அதை ஏற்கனவே முடிவு எடுத்து அறிவித்து விட்டோம். எனவே இந்த நிலைப்பாட்டோடுதான் நாங்கள் தேர்தலை சந்திப்போம். மற்றவர்கள் சொல்வதை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. 

அரசின் கடமையே மக்களுக்கு உதவி செய்வதுதான். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவேதான் மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதில் அரசியல் சாயம் பூசினால் எதிர்க்கட்சிகளின் விருப்பம்.

நடிகர் கமல்ஹாசன் அதிமுகவிற்கு ஒரு பொருட்டே இல்லை. அவரால் தேர்தலில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நடிகர் கமலஹாசன் அரசியல் தடம் பதித்ததும் இல்லை. இனியும் பதிக்கப் போவதில்லை. அவர் உண்மைக்கு புறம்பாக பேசிவருகிறார். கமல்ஹாசன் மட்டுமல்ல யாராக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தவறான கருத்துக்களை சொன்னாள் அதிமுகவின் அமைச்சர் முதல் அதிமுகவின் தொண்டர்கள் வரை பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju press meet about admk cm candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->