ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்?! பிரதமரை சந்தித்தார் சிந்தியா!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அவர் பிரதமரை சந்தித்து இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஜோதிர்ஆதித்யா சிந்தியா டெல்லியில் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மோடியின் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேர் ஏற்கெனவே மாயமாகி கர்நாடகாவில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் பா.ஜ.கவில் இணைந்தாலோ அல்லது தங்களது பதவியை ராஜினாமா செய்தாலோ காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும். அவ்வாறு நடைபெற்றால் பா.ஜ.க பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் உருவாகும் என தெரிகிறது.  

தற்போது காங்கிரஸ் என்ன செய்ய போகிறது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. அமைச்சரவையில் இடம் கொடுப்போம் என அதிருப்தி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் அல்லது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை முதலமைச்சராக அறிவிக்கலாம் என்ற தேர்வுகள் மட்டுமே இருக்கிறது. அதேபோல ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் நிபந்தனைகளை அமித் ஷா ஏற்றுக்கொள்வாரா என்பதும் சந்தேகம் தான் என தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jyotiraditya scindia meets PM Modi and Amit shah


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->