நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்., இந்த நிலை தான் ஏற்படும் !! ஹெல்மெட் வழக்கில் நீதிபதிகள் அதிரடி!! - Seithipunal
Seithipunal


கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது, இந்த வழக்கின் விசாரணை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு. 

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என தமிழக அரசை நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, இதற்கு பதிலளிக்கும் விதமாக முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் பதிவான ஒரு நிமிட கண்காணிப்பு கேமரா காட்சிகள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பார்த்த நீதிபதிகள்,  300க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள்  ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அவர்களை தடுக்காமல் காவல்துறையினர் சிலைபோல் நின்று பார்த்துக்கொண்டு நிற்பதை கண்காணிப்பு கேமராவில் பார்க்க முடிவதாக குற்றம் சாட்டினர். 

இதைத்தொடர்ந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகளின் பட்டியலையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதற்கு, பின்னர் நீதிபதிகளில் கேள்விக்கு பதிலளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், கட்டாய ஹெல்மெட் விதிகள் அமல்படுத்த தமிழகம் முழுவதும் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் உணராததற்காக காவல்துறை செயலற்றிருப்பதாக கூற முடியாது என்றும் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு.

கட்டாய ஹெல்மெட் விதிகளை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர் அதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்து இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

judge warning police in helmate case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->