பழசை கிளறி, ஸ்டாலினிற்கு செக் வைத்த ஜெயக்குமார்.! விழிபிதுங்கும் ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


முதல்வர் பழனிசாமிக்கு, ஸ்டாலின் பாராட்டுக் கூட்டம் நடத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், " திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வருக்கு  எப்போது பாராட்டுக் கூட்டம் நடத்தப் போகின்றார்? எப்போது எங்களை அழைப்பார்? ஸ்டாலின் தான் சொன்னதைச் செய்யா போகிறாரா.?

செய்வார் என தான் நான் நம்பிக்கொண்டு இருக்கின்றேன். அதற்கான ஏற்பாடுகளை ஸ்டாலின் விரைந்து செய்தால், அது தான் உண்மையிலேயே ஆரோக்கியமான அரசியல். இதை மட்டும் செய்தால் உலகமே தமிழகத்தை திரும்பி பார்க்கும். திமுகவுக்கும் சரி அதிமுகவுக்கும் இது மதிப்பை கூட்டும். 

 stalin jayakumar seithipunal

சொன்னதை செய்தால் நல்லது. முதலீடுகளை ஈர்க்க சென்ற முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றதன்மூலம் எவ்வளவு முதலீடுகள் வந்தது என்பது குறித்து முதல்வர் விளக்கி இருக்கின்றார். 

ஆனால், 1996-ல் திமுக தலைவராக இருந்த கருணாநிதி சிங்கப்பூர் எதற்காகச் சென்றார்? சில தனிப்பட்ட விஷயங்களுக்காகச் சென்றுள்ளார். நாங்கள் அப்படியா சென்றோம்? மறைந்த தலைவர் குறித்து பேசக்கூடாது என நினைக்கிறோம். ஸ்டாலின் இப்படிப் பேசினால், பல மோசமான வரலாறைச் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். " என அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar pressmeet today about karunanithi


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal