மே 2-க்கு முன்பே வாக்கு எண்ணிக்கையா.?! தேர்தல் ஆணையரை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கொரோனா காலம் என்பதால், மருத்துவ விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்க ஆலோசனை நடத்தி வருகிறது.

இத்தகைய நிலையில், தபால் வாக்குகளை மே 1ஆம் தேதியே வரிசைப்படுத்தி விட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்தது. இதனை தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், "மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்கு எண்ணும் நாளில் மட்டுமே தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அதற்கு முன்னதாக எண்ணப் படக்கூடாது. கடந்தகால வழிமுறைகள் தான் கடைபிடிக்க வேண்டும். 

மே 1ஆம் தேதியை தபால் வாக்குகள் கட்டுகள் பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தி வைக்க உள்ளதாக சில மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். யாரும் எவ்வித குறையும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் செயல்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் மேசைகள் எந்த காரணம் கொண்டும் குறைக்கப்பட கூடாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar meet satya paradha saahu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->