இணையத்தில் 'ஜன நாயகன்' லீக்...! 'திட்டமிட்ட வேலை இது'...! - ஆதவ் அர்ஜுனா தீவிர விளக்கம்
Jana Nayagan leak internet This planned work Adhav Arjuna serious explanation
விஜய் நடித்துள்ள அவரது கடைசி படைப்பாக எதிர்பார்க்கப்படும் ‘ஜன நாயகன்’ திரைப்படம், ஆரம்பத்தில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அது நீதிமன்றம் வரை சென்றதால், வெளியீடு தாமதமடைந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததும், மே மாதம் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிட தயாரிப்புக் குழு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தவெக தலைவர் விஜய், தனது ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு திட்டமிட்ட முறையில் தடைகள் உருவாக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த பரபரப்பான சூழலில், நேற்று மாலை இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் மர்ம நபர்களால் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை, சுமார் 3 மணி நேரம் கொண்ட முழுப் படமே இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் படக்குழுவினரையும் தயாரிப்பு நிறுவனத்தையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் நோக்கத்துடன் இந்த கசிவு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மற்றும் தயாரிப்பு தரப்பு வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, இணையத்தில் வெளியான படக் காட்சிகளை நீக்குவதற்கான முயற்சிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பலரின் உழைப்பும் முதலீடும் அடங்கிய இந்த படைப்பை இவ்வாறு சட்டவிரோதமாக வெளியிடுவது நேர்மையின்மையின் வெளிப்பாடு எனவும், கசிந்துள்ள லிங்குகளை யாரும் பகிர வேண்டாம் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அது சாட்டிலைட் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போது அந்த கட்டுப்பாடு அரசியல் தாக்கத்தில் உள்ளது. ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் கசிந்தது விஜய்க்கு எதிரான மிரட்டல் நடவடிக்கை.
இப்படத்தைத் தடுக்க பல்வேறு தரப்புகள் அழுத்தம் கொடுத்தது தெரியும். விஜய்க்கு பெரிய இழப்பு ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த கசிவு நடந்துள்ளது” என தெரிவித்தார்.மேலும், “இப்படத்தை நிறுத்த முயன்றவர்களை நாங்கள் அறிவோம். அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் விஜய் ஒருபோதும் பின்னடைய மாட்டார்” என்றும் அவர் வலியுறுத்தினார் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Jana Nayagan leak internet This planned work Adhav Arjuna serious explanation