முக்கிய நபரை சந்திக்க போகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.! வெளியாகப்போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்போதில் இருந்தே கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடுகள் நடைபெற்று வருகிறது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும் அமைந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றது. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடரும் என கூறப்படுகிறது. 

இதனிடையே தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக வருகிற 18-ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின் போது மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்தும் பேசப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jan 18 edappadi palanisamy going to delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->