உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மெரினா புரட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்.! சற்றுமுன் தமிழக அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2017 ஆம் ஆண்டு உலகமே தமிழகத்தை பார்த்து பெருமை பட்ட நேரம் அது அன்றுவரை அதுபோல் ஒரு போராட்டத்தை பார்த்திடாத உலகம். தமிழனின் ஒற்றுமையை கண்டு வியந்த நேரம் அது. ஜல்லிக்கட்டு விழாவுக்காக நடந்த ''மெரினா புரட்சி'' போராட்டம் தான் அது. 

ஆம், தமிழகம் மட்டும் அல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழ் இரத்தங்கள் போராட்டத்தில் இறங்கின. உலக வரைபடத்தில் தமிழனின் போராட்டம் தனியாக தெரிந்த நாட்கள் அது. ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராட்டத்தில் இறங்கியத்தை கண்ட விலங்குகளை பாதுகாக்கும் ''பீட்டா'' வே அதிர்ந்து போனது.

சமூக இணையதளங்களின் மூலமாக ஒருங்கிணைந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களுக்கு எந்த தலைவனும் இல்லை என்பது இதன் சிறப்பு. எந்த அரசியல் கட்சிக்கும் வேலை இல்லை. சொல்லப்போனால் இந்த போராட்டத்தை பார்த்த அரசியல்கட்சிகள் இனி நாம் அரசியல் செய்யவே முடியாது என்ற ஒரு நிலை தான்.

தமிழகத்தில், அலங்காநல்லூரில் ஆரம்பித்த போராட்டம் மளமளவென உலகம் முழுவதும் பரவியது. இதில் மாபெரும் போராட்டமாக சென்னை மெரீனா கடற்கரையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். முடிவில் பல கசப்பான சம்பவங்கள் நடந்தாலும், போராட்டம் மாபெரும் வெற்றிபெற்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நினைவாக நினைவு கல்வெட்டு அமைக்க தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, அறிவிப்பாக இல்லாமல் தமிழக முதல்வர் இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அதே சமயத்தில். மெரினா புரட்சியின் கடைசி நாளில் தமிழக போலீஸ் நடத்திய கோரா தாண்டவத்தை இளைஞர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதை சமூக வலைத்தளங்களில் ஒரு சில பதிவுகளை பார்க்கும் போது அனைவரும் உணர்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

 

கல்வெட்டு மட்டும் அல்ல. மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் நினைவாக காளையை அடக்கும் தமிழனின் ஒரு சிலை வைக்க வேண்டும் என்பதும் தமிழக இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. இது சம்மந்தமாகவும் தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jallikattu merina puratchi


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal