#Breaking: அதிமுக பிரமுகர் வீடு உட்பட 16 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை.!  - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த 3 தினங்களாக சென்னை, கடலூர், ஹைதராபாத், மும்பையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே அதிமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அதிமுக பிரமுகர் மும்பையில் ஸ்டீல் கம்பெனி ஒன்றை நடத்தி வருவதாகவும், இவர் சிறப்பு பொருளாதார மண்டலம் நிர்வாகியாகவும், அதன் முன்னால் இயக்குனராகவும் பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இவர் வெளிநாட்டில் முதலீடு செய்தது, வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் இவர் மீது எழுந்ததால், இந்த அதிரடி சோதனை நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

16 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணங்கள், ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

it raid in admk vip home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->