விஜய் வசந்திற்கு இவ்வளவு பெரிய பொறுப்பா? காங்கிரசில் என்ன நடக்கிறது? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆட்சியமைக்க பாஜகவிடம் தனித்த பெரும்பான்மை இல்லாத நிலையில், நிதிஷ்குமார் மற்றும் சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களின் கூட்டணி கட்சி மூலம் 3 வது முறையாக பாஜக வெற்றி ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உறுப்பிர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், பாஜகவில் முன்னர் இருந்த அரசுத்துறை அமைச்சர்கள் ஒரு சிலரின் பதவியில் மாற்றம் இல்லாமல் மீண்டும் அவர்களையே அதே துறையில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

மேலும் கூட்டணி கட்சிகள் மூலம் இந்தியா கூட்டணி வெற்றி பெறாத நிலையில், ராகுல் காந்தி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

இந்த நிலையில், நாடாளுமன்ற குழுவின் பொறுப்பாளர்களை நியமித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு செயலாளர்களாக ரன்ஜீத் ரஞ்சன் மாநிலங்களவையிலும், எம்.கே.ராகவன் மக்களவையிலும், அமர் சிங் லோக்சபாவிழும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு பொருளாளராக கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it such a big responsibility for Vijay Vasantha What is going on in Congress


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->