காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நாயகன்.. தேதி குறிச்சாச்சு.. எகிறும் எதிர்பார்ப்பு.!!
Info Congress loksbha 2024 manifesto release on April5
இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் முதற்கட்டமாக தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை பல்வேறு அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ளன.
திமுக, அதிமுக பாமக உள்ளிட்ட மாநில கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு இருந்தாலும் பிரதான தேசிய கட்சியாக பார்க்கப்படும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்ற தகவல் டெல்லி வட்டாரத்தில் கசிந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் பெண்கள் இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
English Summary
Info Congress loksbha 2024 manifesto release on April5