திமுக எம்.பி., மகனின் கட்சி பாஜகவிற்கு முழு ஆதரவு - அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 மக்களவை பொதுத் தேர்தலில் திமுகவின் உதயசூரிய சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பச்சைமுத்து. இவர் நிறுவனராக உள்ள கட்சி ஐஜேகே (இந்திய ஜனநாயகக் கட்சி). இந்த கட்சியின் தலைவராக பச்சைமுத்து எம்.பி.,யின் மகன் ரவி பச்சமுத்து இருந்து வருகிறார். 

திமுகவின் உதயன் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பச்சமுத்து எம்.பி., கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் திமுக மற்றும் திமுகவின் தலைமைக்கு எதிரான கருத்துகளையும் அவ்வப்போது தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக எம்பி பச்சமுத்துவின் கட்சியான ஐஜேகே பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார். 

அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சிறப்பாக இயங்கி வருகிறது.

நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டை, இந்திய ஜனநாயகக் கட்சி முழுமனதோடு ஆதரிக்கின்றது." என்று ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IJK support to DMK erode by election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->