#BiGBREAKING: உச்சகட்ட கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்., முதல்முறையாக ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜக.! - Seithipunal
Seithipunal


ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுவதாக தெரிகிறது.
 
தெலங்கானா : ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியது. தெலங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்டீரிய சமிதி 2 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியது .

இந்நிலையில், சற்றுமுன் வெளியான முன்னிலை நிலவரப்படி, ஐதராபாத் மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. 

மொத்தம் உள்ள 150 இடங்களில் பாஜக 88ல் தற்போது முன்னிலை பெற்றுள்ளது. 32 இடங்களில் தெலங்கானா ராஷ்டிர சமிதியும், 17 இடங்களில் ஓவைசி கட்சியும் முன்னிலை பெற்றுள்ளது. ஐதராபாத் மாநகராட்சியை முதன்முறையாக கைப்பற்றுகிறது பாஜக

இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓவைசியின் கட்சிகளை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hydrabad election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->