கூட்டணி குறித்து மாநில தலைவர் முடிவு செய்ய முடியாது.. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக தனியாக போட்டியிட்டால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு ஏராளமான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கட்சியின் மையக் குழுவில் பேச வேண்டிய கருத்தை ஏன் இங்கு பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரைக்கு வந்த தமிழக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பற்றியோ ராஜினாமா என்று கூறியதோ அனைத்துமே பத்திரிகையாளர்களை சந்தித்து கூறாத விஷயங்கள்.

அவை கசிந்த வார்த்தைகளை தவிர முறையாக வெளியில் கூறியது அல்ல. எனவே இதை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவை கூட்டணி குறித்தோ, வேட்பாளர்கள் குறித்தோ மாநில தலைவர்கள் முடிவு செய்ய முடியாது கூட்டணி குறித்தும் வேட்பாளர்கள் குறித்தும் மத்திய பாஜக தான் முடிவு செய்யும்.

இப்போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை பூத் கமிட்டி உருவாக்கும் பணி மட்டுமே எனவே நாங்கள் அதை மேற்கொள்ள இருக்கிறோம். பாஜகவின் ஆதரவாளர்களும், தொண்டர்களும் முழுமையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாக எந்த கட்டுக் கதைகளையும் பரப்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HRaja speech about Annamalai alliance decision


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->