திமுகவை வேரோடு அழிக்க பாஜக அனைத்து வேலைகளையும் செய்யும்! எச்.ராஜா எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தை அடுத்த மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது பேசிய அவர் "தமிழகத்தில் தினம் தினம் கொள்ளை, கொலை, திருட்டு நடக்கிறது. கோவை தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. தமிழகத்தில் பிரிவினைவாதம், தேசவிரோத சக்திகள் தலை விரித்து ஆடுகின்றன. 

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பிரிவினைவாத நோக்கத்தோடு தனி தமிழ்நாடு என பேசியதற்கு கைது செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக அரசின் மீது உள்ள அதிருப்தியை திசை திருப்ப பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கின்றன.

தமிழக ஆளுநர் ஆர்.என்ரவியை ஒருமையில் பேசிய திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதியை வன்மையாக கண்டிக்கிறேன். திமுகவை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்க பாஜக அனைத்து வேலைகளையும் செய்யும்" என திமுகவிற்கு எச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HRaja says BJP will do anything to destroy DMK Party


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->