எம்பி பதவியை இழக்கப்போகும் 4 திமுக எம்பிக்கள்? உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் வேறு கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 

வேறு கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது, செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுபடி ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என கூறினார். மேலும் விதிகளின்படியே வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்கப்பட்டதால், இதனை ஒரு தேர்தல் வழக்காகதான் தொடர முடியும் என விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து பேசிய நீதிபதிகள், ஒரு தேர்தலில் வாக்குறுதிகள், வேட்பாளர்களை கடந்து சின்னங்கள் தான் முக்கிய பங்கு அளிக்கின்றனர். அப்படியிருக்கும் போது உறுப்பினராக இல்லாதவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா?" என கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோர் விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உதயசூரியன் சின்னத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court notice for dmk mps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->