மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம்.! மக்களே உஷார்., வெளியான பரபரப்பு செய்தி.! - Seithipunal
Seithipunal


தீபாவளிப் பண்டிகை நடந்து முடிந்து உள்ளதால், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். 

சுகாதாரத் துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய அந்த கடிதத்தில், "தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேநேரத்தில் வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இணை நோய்கள் உள்ளவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது.

கட்டுமானப் பகுதிகள், நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள், தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண் காணித்து கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக கட்டுமானப் பகுதிகளில் கொரோனா தொற்று பரவுகிறது.

தஞ்சாவூர் மற்றும் சென்னை தண்டையார்பேட்டையில் கட்டுமானப் பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியப் பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை குறைக்கக் கூடாது. படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளதால் இனிவரும் 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும். வரும் நாட்களில் கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்." என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health Secretary J. Radha Krishnan write letter to collectors


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->