இந்த தேர்தலில் தனித்துதான் போட்டி., அதிரடி அறிவிப்பு வெளியானது.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், கோவா யூனியன் பிரதேசத்தில் 40 தொகுதிகளுக்கும் வருகின்ற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கோவா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கோவா சட்டமன்ற பொதுத்தேர்தலின் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அமித் பால்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கோவாவில் 40 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மன் போட்டுயிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goa Aam Aadmi CM Candidate AmitPalekar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->