#BreakingLIVE : 42 வருட போராட்டம்., மருத்துவர் இராமதாஸ் அவர்களால் மட்டுமே இது சாத்தியம்.! ஜி கே மணி உரை.!  - Seithipunal
Seithipunal


மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளதால் வன்னிய மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முழு முதல் காரணமாக இருந்த இந்திய மூத்த தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவருமான மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு, பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து இணையவழியில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்து, இன்று (31.07.2021 சனிக்கிழமை) பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் இந்த பாராட்டு விழாவில், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

மேலும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், பிற மூத்த தலைவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர். பாராட்டு விழாவின் நிறைவாக மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஏற்புரையாற்றுகிறார். இந்த விழாவில் பா.ம.க. மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இணைய வழியில் பங்கேற்று உள்ளனர். 

இந்நிலையில், இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி கே மணி பேசியதாவது, "மருத்துவர் இராமதாஸ் அவர்கள் கடந்த 42 வருடங்களாக சமூக நீதிக்காக போராடி வருகிறார். இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோருக்கு மருத்துவ கல்விகளில் இட ஒதுக்கீடு, தற்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு ஆகியவற்றை பெற்றுக்கொடுத்துள்ளார். மருத்துவர் இராமதாஸின் சாதனைகளை சொல்ல வேண்டும் என்றால் நாள் போதாது.. அவ்வுளவு சாதனைகளை அவர் செய்து இருக்கிறார். 

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு 42 வருடமாக போராடி வரும் நமது மருத்துவர் அய்யா, பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். ஆனால், அவரின் குறிக்கோளில் இருந்து ஒருநாளும் பின்வாங்கியது இல்லை. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், இந்நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. 

மருத்துவர் இராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கிக்கொடுத்ததை போல, அனைத்து சமூகத்திற்கும் இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுப்பார். மருத்துவர் இராமதாஸின் போராட்டத்தை முன்னெடுத்த 21 பேர் தன்னுயிரை இழந்தார்கள், இலட்சக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். உயிர் நீத்த தியாகிகள் மருத்துவர் அய்யா வாழ்க., வன்னியர் சங்கம் வாழ்க., என்று முழக்கமிட்டே உயிரை விட்டனர்.

பல இழப்புகளை கொடுத்து நாம் இதனை சாதித்துள்ளோம். இவை அனைத்தையும் நடத்தி காண்பித்தவர் மருத்துவர் அய்யா மட்டும் தான். மருத்துவர் அய்யாவின் போராட்டம், இட ஒதுக்கீடு வரலாறு ஒவ்வொரு நபருக்கும் தெரிய வேண்டும். மருத்துவர் அய்யாவின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி சேர்க்க துணை நின்ற சரஸ்வதி அம்மையாருக்கும், அன்புமணி இராமதாசுக்கும் நன்றிகள் பாராட்டுக்கள். இந்த இட ஒதுக்கீடு கிடைக்க போராடிய வன்னிய சொந்தங்களுக்கும், பாட்டாளி சொந்தங்களுக்கும் நன்றிகள் பாராட்டுக்கள்." என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Mani SPeech on Meeting 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->