திமுகவில் வானதி சீனிவாசன்.. அண்ணாமலை தான் காரணம்.. உண்மையை போட்டு உடைத்த காயத்ரி..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவிற்கு சட்டமன்ற உறுப்பினர்களாக 4 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ள வானதி சீனிவாசன் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைய போவதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சி வானதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் கடந்த 15 வருடங்களாக வட தமிழக விஷ்வ இந்து பரீட்சத் தலைவராக இருந்து வந்த வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பாஜகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் ரீட்வீட் செய்து உள்ளார். அந்த பதிவில் "பா.ஜ.க கட்சியில் இருந்து மேலும் ஒரு மூத்தவரை முடித்து வைப்பதாக அண்ணாமலை ஜியின் ஆதரவாளர்கள் வதந்தியாக இருக்கலாம். யார் தேசிய கட்சியிலிருந்து வெளியே வர விரும்புகிறார்கள்? பெரும்பாலும் நாம் விரட்டியடிக்கப்படுகிறோம்.

1. தேசிய மகிளா மோர்ச்சா தலைவர்.

2. பார்லிமென்ட் போர்டில் வானதி உறுப்பினர்.

3. பாஜக கொங்கு மண்டல எம்எல்ஏ.

இதுவே அவர்களை துரத்த போதுமான காரணம். இப்போது அவரை திமுக என்று முத்திரை குத்த முயற்சி நடக்கிறது. இது பழங்கால உத்தி." என பதிவிட்டுள்ளார். காயத்ரி ரகுராமின் இத்தகைய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காயத்ரி ரகுராம் ஏற்கனவே திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசனை நேரில் சந்தித்ததால் 6 மாதம் தற்காலிகமாக தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gayatri alleges if Vanati joins DMK Annamalai is the reason


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->