பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, நடிகை கௌதமி எடுத்த அதிரடி முடிவு.! குவியும் பாராட்டு.!! - Seithipunal
Seithipunal


தொண்ணூறுகளில் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை கௌதமி. கடைசியாக கமலஹாசனுடன் இணைந்து பாபநாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சமூகத்தின் தற்போதைய பெண்களின் பாதுகாப்பு குறித்தும், ஒரு தாய் தந்தையின் தவிப்பு குறித்தும், பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்தும் விளக்கியிருந்தது.

சமீப காலமாகவே திரைத்துறையை அடுத்து அரசியலிலும், சமூக செயல்பாடுகளிலும் நடிகை கௌதமி ஈடுபட்டு வருகிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டுள்ளவர். அவர் மறைவுக்குப் பின்பு அவர் அளித்துள்ள பேட்டியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தார்.

மேலும் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, முதல்வர் ஜெயலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல் உலகம் முழுவதும் மீ டூ என்ற விவகாரம் பெண்களுக்கு உண்டான பாதிப்பு குறித்தும், பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் குறித்தும் விவாதம் செய்து கொண்டிருந்த வேளையில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது சிறுமிகள் மட்டுமல்ல, சிறுவர்களும் என்று புதிய கண்ணோட்டத்தை சமூகத்தின் முன் வைத்தார்.

அப்போது அவர் கூறிய கருத்துக்களில், ''பாலியல் ரீதியாக சீண்டுகிறவர்களை கடுமையாக தண்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் தொந்தரவுக்கு ஆளாகுவது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தான். பெற்றோர்கள் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கிய கடமையாகும்'' என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவிசெய்ய கௌதமி நேரில் சென்று உள்ளார். அப்போது திருவண்ணாமலையில் உள்ள பள்ளி கல்வியாளர்களிடம் நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால கல்வி பற்றி ஆலோசனை நடத்தினார்.

மேலும் அந்த மாவட்டத்தில் ஒரு கல்வி மையம் ஒன்றை நிறுவி, அதில் ஏழை குழந்தைகளுக்கு என கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களை கற்பிக்க  உள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்த தலைமுறையும், நாட்டின் எதிர்காலமும் ஆன குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்யவும் அவர் முடிவெடுத்துள்ளார். அவரின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவித்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gautami new way for education


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->