வருங்கால 'துணை முதலமைச்சரே'....! - பதட்டமடைந்த நயினார் நாகேந்திரன்
Future Deputy Chief Minister Nainar Nagendran is nervous
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடி திருவாதிரை விழாவில் வரும் 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பா.ஜ.க. சார்பில் இதனை முன்னிட்டு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பா.ஜ.க. மாநில தலைவர் ''நயினார் நாகேந்திரன்'', கருப்பு முருகானந்தம், கேசவ விநாயகம், முன்னாள் மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பரமேஸ்வரி வரவேற்று தெரிவிக்கையில், "நயினார் நாகேந்திரனை வருங்கால 'துணை முதலமைச்சரே' என குறிப்பிட்டு தெரிவித்தார்.
அங்கு உடனடியாக பதட்டமடைந்த நயினார் நாகேந்திரன் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என மாவட்ட தலைவர் பரமேஸ்வரிக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமைந்தது முதலே, ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி எனும் சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை, துணை முதலமைச்சர் என குறிப்பிட்டு மாவட்ட தலைவர் அழைத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Future Deputy Chief Minister Nainar Nagendran is nervous