தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு..! 6-வது மாவட்டமாக வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று மட்டும் கோவிட்-19 தொற்று 2,865 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த 19 ஆம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் தேதி காலை 12 மணிமுதல் சென்னையில் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரையிலும் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.  

இருந்தபோதிலும், தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தேனியில் நேற்று மாலை முதல் முழு ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஊரடங்கு அமலானதை அடுத்து கம்பம் நகரில் கடைகள் மூடப்பட்டது. இதனையடுத்து மறு உத்தரவு வரும் வரை தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

full lock down in theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->