எலான் மஸ்க்குக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய அரசியல் பிரபலம்.!
FreeSpeech ElonMusk Twitter shashi tharoor
டிவிட்டரின் 100 சதவீத பங்குகளையும் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்கிடம் டிவிட்டர் நிறுவனம் விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்து உள்ளது
இந்நிலையில், டிவிட்டரில் கருத்து சுதந்திரம் குறித்து உலகின் முன்னணி கோடீஸ்வரரும், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "நான் கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர். நான் கருத்து சுதந்திரம் என குறிப்பிடுவது, அந்நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தை தான்.
ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை பரப்புவதற்கு என்றும் எதிரானவன் நான். ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது அந்நாட்டு மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுவது என்று கருதுபவன் நான்" என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எலான் மஸ்கிற்கு ட்வீட் மூலம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், "சமூகவலைதள நிறுவனம் குறித்து எங்களுக்கு அக்கறையும் இல்லை. முக்கியமுமில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்? எப்படிச் செய்கிறீர்? என்பதே எங்களுக்கு முக்கியம்.
இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் ட்விட்டர் தளம் குறுக்கிட்டாலோ, பேச்சு சுதந்திரத்தில் நேர் எதிராக வெறுப்பு, வசை பாட அனுமதி கொடுத்தாலோ, ஐடி ஆணையக் குழு நடவடிக்கை எடுக்கும்" என்று சசி தரூர் எச்சரித்துள்ளார்.
English Summary
FreeSpeech ElonMusk Twitter shashi tharoor