திமுகவை மூன்றாமிடம் தள்ளி வெற்றி பெற்ற சுயேச்சை பெண்!! - Seithipunal
Seithipunal


ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமலேயே கவுன்சிலராக ரேஷன் ஊழியரின் மனைவி சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 

சேலம் அருகே ஏ.என்.மங்கலத்தைச் சேர்ந்த பாரதி (27). நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், 8- வது வார்டுக்கு உட்பட்ட ஏ.என்.மங்கலத்தில் ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டார். 

பாரதியின் கணவர் ஜெயக்குமார், ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றுகிறார். கீழ் நடுத்தர வர்க்க குடும்பம்தான். பணபலமோ, அரசியல் பின்புலமோ எதுவும் இல்லாத இவர்களுக்கு இதுதான் முதல் தேர்தல் அனுபவம். உள்ளூரின் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு பாரதிக்கு வேறுஎந்த செல்வாக்கும் கிடையாது. 

ஆனால், நடந்து முடிந்தஉள்ளாட்சி தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளையும் தோற்கடித்து இருக்கிறார் பாரதி ஜெயக்குமார். 8வது வார்டில் மொத்தம் 5350 வாக்குகள் உள்ளன. பதிவானவை, 4250 வாக்குகள். இதில், பாரதி 1177 வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். பாரதிக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்த வள்ளி அகரம் ராஜேந்திரனைக் காட்டிலும் 129 வாக்குகள் கூடுதலாகப் பாரதி பெற்றுள்ளார். 

திமுகவைச் சேர்ந்தவரான அகரம் ராஜேந்திரன், அக்கட்சியில் தனக்கு சீட் கிடைக்காததால், தனது மனைவியான வள்ளியை அந்த வார்டில் சுயேச்சையாக போட்டியிட வைத்தார். அவருடைய குடும்பமும், அங்கு செல்வாக்கு பெற்ற குடும்பம்தான். இதே வார்டில் திமுக மூன்றாம் இடம் தான் பிடித்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

freedom candidate win in election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->