கோவையில் சிக்கிய சாக்கு முட்டைகள்.. திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


கோவையில் பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளரின் உருவம் பொறித்த டி-ஷர்ட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் கள்ளப்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற ஆம்னி காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது omni காரில் மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சாக்கு மூட்டைகளை திறந்து பார்த்தனர். 

அப்போது அந்த சாக்கு மூட்டையில் பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜனின் உருவம் பொறித்த 2000 டி-ஷர்ட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

ஆர்டரின் பெயரில் திருப்பூரில் இருந்து எடுத்துச் செல்வதாக கார் ஓட்டுநர் தெரிவித்த நிலையில் கார் ஓட்டுநர் மற்றும் டி-ஷர்ட்களை ஆர்டர் செய்த நபர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flying squad seized 2000 BJP tshirts in Coimbatore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->