ஈரோடு | கருத்துக்கணிப்புகளுக்கு தடை! மீறினால் இரு ஆண்டுகள் சிறை! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டால் இரண்டு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வருகின்ற 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக தீவிர பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கியுள்ள நிலையில், அதிமுக தரப்பில் கே எஸ் தென்னரசு களமிறங்கி உள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவையும் கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்கியுள்ளன.

இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற 16ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 27ஆம் தேதி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடலாம் என்றும் அந்த உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடையை மீறி கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் சத்தியபிரதா சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Eelection Exit Poll ban


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->