இம்முறை தர்மயுத்தம் கிடையாது.. அதிமுகவில் இருந்து ஒதுங்கும் ஓ.பி.எஸ்?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த முறை உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது. 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் எடப்பாடியால் தான் ஓரங்கட்டப்பட்டு வருவதைத் தடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். விரக்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களையும் எடப்பாடி அலட்சியப்படுத்தி வருவதாவும் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர் கே.பி.முனுசாமியின் பேத்தி நடன அரங்கேற்றம் சென்னையில் நடைபெற்றது. 

நடன அரங்கேற்றத்துக்கு முறைப்படி அழைத்தும் எடப்பாடி கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டாராம். வரும் காலகட்டத்தில் எடப்பாடியும், சசிகலாவும் கைகோர்த்தால் தாம், அதிமுகவில் இருந்து ஓரக்கட்டப்படுவோம் என்ற பயத்தில் ஓ.பி.எஸ். உள்ளதாக கூறப்படுகிறது. 

தன் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் கிடைத்தால் போதும், தான் அதிமுகவில் இருந்து  ஒதுங்கிவிடலாம் என்று ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளதாக, அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps plan ops upset


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->