அய்யயோ.. அது நான் இல்லை.! நான் இல்லை.!! பதறிய முதல்வர் எடப்பாடி.. பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களை சாமுவேல் மேத்யூஸ் சந்தித்தார். அப்போது அவர் உருவாக்கிய ஜெயலலிதாவிய கொடநாடு மரணங்கள் தொடர்பான புலனாய்வு வீடியோவை வெளியிட்டார். அந்த காணொலியில் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைகள் குறித்தும் அதன்பிறகு நடைபெற்ற ஜெயலலிதா வாகன ஓட்டுனரின் மரணம் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, 'அ.தி.மு.க வின் கிரிமினல் கேபினட் கொடநாட்டில் கொலை செய்து கொள்ளை அடித்திருக்கும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன; குற்றவாளிகளின் இந்த அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக்கூடாது. இவர்களைப் பாதுகாத்து வரும் மத்திய அரசு உடனடியாக இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்' என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருந்தார்.

அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் இச்சம்பத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும், இக்குற்றச் சம்பவத்தின் பின்னணியில் பதவியில் இருப்பவரது பெயரே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், அதை கண்காணிக்கும் விதமாக பதவியிலுள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் அந்த விசாரணையை நடத்த வேண்டும். இல்லையேல் நீதிமன்றமே தாமாக முன்வந்து தனது முழு கட்டுப்பாட்டில் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்'' என தினகரன் அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அப்போது முதல்வர் தெரிவித்ததாவது, ''கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை. அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள திராணியற்றவர்கள் இதுபோன்ற குறுக்கு வழியை கையாண்டுள்ளனர். அரசியலுக்காக தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கின் முடிவில் உண்மை வெளி வரும்'' என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

English Summary

eps open talk about kodanadu murders


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal