உதயநிதிக்கு "வெக்கம், மானம், சூடு, சொரணை" இருக்கா? - வெளுத்து வாங்கிய ஈ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர் "மு க ஸ்டாலின உதயநிதியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியல.. இதனால மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. ஆட்சியாளர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை ஏதாவது இருக்குதான்னு கேட்டாங்க.. 

நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் முடிந்து 5 வருஷம் ஆகிவிட்டது அடுத்த கட்ட தேர்தலும் வந்திருச்சு.. திமுக ஆட்சிக்கு வந்து 3 வருஷம் ஆயிடுச்சு.. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வேன்னு சொன்னிங்களே.. ரத்து செஞ்சீங்களா.. வீடியோ போட்டு காட்டுங்கப்பா.." என உதயநிதி ஸ்டாலின் பேசிய பழைய வீடியோவை அதிமுகவினர் முன்னிலையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. 

அந்த வீடியோவில் திமுக ஆட்சி அமைந்ததும் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். எங்களுக்கு தெரியும் எப்படி ரத்து செய்யனும்னு.. நம்ம தலைவருக்கு தெரியும்.. இத சொன்னா கூட இந்த ஆட்சியாளர்களுக்கு சொந்த புத்தியே கிடையாது. 

அதை எப்படி ரத்து பண்ணுவீங்க சொல்லுங்க.. ரகசியத்தை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்லுங்கன்னு கேக்குறாங்க.. ஒரே ஒரு ரகசியம் தன்.. அந்த ரகசியத்தை இப்ப சொல்றேன்.. கொஞ்சமாச்சோ வெட்கம், மானம், சூடு, சொரணை, மாணவர்கள் மீது அக்கரை தமிழக மக்கள் நல்லா இருக்கணும்னு நினைச்சா மட்டும் போதும் என்று பேசிய வீடியோ திரையிட்டு காண்பிக்கப்பட்டது. 

உதயநிதி பேசிய வீடியோ திரையிடப்பட்ட பிறகு பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆகவே நாங்கள் கேட்கிறோம் திரு மு‌.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இருக்கா? நீங்க கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா? அப்பாவுக்கும் மகனுக்கும் சூடு சொரணை இருக்குதா? அப்படின்னு நாட்டு மக்கள் கேட்கிறார்கள் ஸ்டாலின் அவர்களே பதில் சொல்லுங்க.." என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS criticized DMK MKStalin udhayanithi in kanchipuram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->