கடைசி நேரத்தில்.. திமுக, பாஜக ஒன்று சேர.. இறங்கி அடிக்கும் எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலைடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் உள்ள தனது இல்லத்தை செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர் "கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 520 அறிவிப்புகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அந்த அறிவிப்புகளில் சுமார் 10 சதவீதத்திற்கு குறைவான அறிவிப்புகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் போதை பொருள் பிரச்சனை நதிநீர் பிரச்சனை விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டம் மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு என்று பல பிரச்சினைகள் தமிழகத்தின் நிலவிக் கொண்டிருக்கிறது இதையெல்லாம் கட்டுப்படுத்த விடியா திமுக அரசு, அதோடு  பாஜக அரசும் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவித்த வாக்குறுதிகளை மத்திய  அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த போது பெட்ரோலின் விலை 71 ரூபாய், டீசல் விலை 55 ரூபாய். அப்போது வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த போது ஒரு பேரல் 15 டாலராக இருந்தது. இன்றைய தினம் பெட்ரோல் 102 ரூபாய்க்கும் டீசல் 94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்யும் கச்சா எண்ணையின் விலை ஒரு பேரல் 86 டாலர். 2014 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் போது பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ளது. விலையை குறைக்காமல் அதிக வரி போட்டு மக்கள் மீது பெரிய சுமையை ஆளுங்கட்சியினர் சுமத்தியுள்ளனர். 

மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதால் தான் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடுகிறது. மோடி அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்வதால் எந்த பயனும் கிடையாது. 

 

மத்திய அமைச்சர்களும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒவ்வொரு மறை வரும்போது ஏதாவது ஒரு திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்திருந்தால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருக்கும். அதை விடுத்து வாக்குகளை மட்டும் குறி வைத்து இன்று தமிழகத்திற்கு வருவது வேதனை அளிக்கிறது. இதனால் எந்த நன்மையும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கப் போவதில்லை. 

பேரிடர் வரும்போது எல்லாம் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கிறது. அப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதும் இதே நிலைதான் நீடித்தது. மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் ஆளும் மாநிலத்திற்கு நிதியை தாராளமாக வழங்குகின்றனர். 

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் போல வஞ்சிக்கப்படுகிறது. இதுதான் இன்றைய நிலவரம். தமிழ்நாட்டிற்கு தேவையான மின் உற்பத்தி போதுமானதாக இல்லை. மாநில அரசு மின் உற்பத்திககு தனி கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

மின் தேவைக்கு ஏற்ப ஆளும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் திமுக அரசு எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படுகிறது"ஆமா என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS criticized DMK BJP MKStalin Narendra Modi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->