அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகன்.. திடீரென மருத்துவமனைக்கு சென்ற இபிஎஸ்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தி.மு.கவின் பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை அல்லது இன்று மதியம் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் அரை மணி நேரம் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் ரத்தம், யூரின் மற்றும் ஈசிஜி உள்ளிட்ட பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இது அவருக்கு நார்மல் செக்கப் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps blood checkup for apollo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->