'மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடத்தான் கரூருக்கு முதல்வர் ஓடியுள்ளார்': இபிஎஸ் குற்றசாட்டு..!
EPS alleges that the Chief Minister ran to Karur to seek political gain from the people
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுபயணத்தில் இருபத்து வருகிறார். அதன்படி, இன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.
அப்போது, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 68 பேர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் பேசியதாவது: கச்சத்தீவை மீட்பதற்கு இபிஎஸ் எதுவும் செய்யவில்லை என்று இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். கச்சத்தீவைப் பற்றி பேச அவருக்கு தகுதியில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதுதான் கச்சத்தீவை தாரை வார்த்தது.

16 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்த திமுக இதுகுறித்து பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.அத்துடன், அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. இதனால், மீனவர்கள் வாக்கு தேவைப்படுகிறது. அதனால் நாடகத்தை முதல்வர் அரங்கேற்றுகிறார் என்றும், உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், அப்போதே மீட்டிருக்கலாம். அப்போதெல்லாம் தவறவிட்டுவிட்டு எங்கள் மீது இப்போது குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்..? என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், கரூரில் நடந்த சம்பவத்தில் 41 உயிர்களை இழந்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், அஞ்சலி செலுத்தினீர்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், உங்கள் ஆட்சியில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் பருகி 68 பேர் இறந்தார்கள், அப்போது ஏன் போகவில்லை, அவர்களை ஏன் சந்திக்கவில்லை.?. அவர்களுக்கு ஆறுதல் என் சொல்லவில்லை..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு காரணம் இப்போது அடுத்தாண்டு தேர்தல் வருகிறது, இதனால்,மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடத்தான் கரூருக்கு ஓடியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையிலே மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக செல்லவில்லை என்றும், எல்லா விஷயத்திலும் அரசியல் கணக்கு பார்க்கும் கட்சி திமுக என்று விமர்சித்துள்ளார்.
மேலும், இபிஎஸ்க்கு கொள்கை இல்லை என்கிறார். கொள்கை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இருக்கிறதா? என்று கேட்டுள்ளதோடு, பாஜவை எதிர்த்து இண்டி கூட்டணியை ஏற்படுத்தினர். மாநிலத்தில் எதிர் எதிராகவும், எம்பி தேர்தலில் ஒன்றாகவும் இருக்கும் நீங்களா கொள்கையுடைய கட்சி.? என்று சரமாரியாக கேள்வி தொடுத்துள்ளார்.
அத்துடன், உங்களூக்கு அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதுதான் முக்கியம். மத்தியில் அதிகாரத்துக்கு வருவதற்கு எந்த வேஷமும் போடத் தயங்காதவர் திமுக தலைவர். அந்த அடிப்படையில்தான் இண்டி கூட்டணி அமைந்துள்ளது என்று மக்கள் மத்தியில் எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஒவ்வொரு கட்சிக்கும் முரண்பட்ட கருத்துடைய நீங்கள் பேசலாமா? ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கையுண்டு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை என்பது நிலையானது அது அதிமுகவிடம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திமுக பல தேர்தலில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள், நீங்கள் கூட்டணி அமைத்தால் நல்லது, அதிமுக அமைத்தால் தவறா..? என்றும், உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? என்று கேட்டுக்குள்ளார். ஊழல் நிறைந்த திமுகவை நீக்கவேண்டும் என்பதில் ஒத்த கருத்துடைய அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விளக்கியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் மிசா சட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் சிறையில் இருந்தனர் என்றும், உங்களை சிறையில் அடைத்த கட்சியோடு நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். அதிமுக அப்படியல்ல, திமுகவை அகற்றவே கூட்டணி வைத்தோம் என்று இபிஎஸ் பேசியுள்ளார்.
English Summary
EPS alleges that the Chief Minister ran to Karur to seek political gain from the people