2.5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி கடன்.. இதுதான் திமுகவின் சாதனை.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராஜசேகருக்காக பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி "தமிழகத்தில் 90 சதவீதம் முதியோர்களுக்கு நாங்கள் முதியோர் உதவித் தொகையை வழங்கினோம். இப்போது இந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். ஏழை எளிய குடும்ப பெண்களுக்கு தாளிக்கு தங்கம் திட்டம் கொண்டு வந்தோம். அதையும் திமுக அரசு ரத்து செய்து விட்டது. 

ஏழை ஏழை மக்களுக்காக தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம் அந்தத் திட்டத்தை கூட பொறுத்துக் கொள்ள முடியாத அரசு தான் திமுக அரசு. அம்மா மினி கிளினிக் திட்டத்தை ஏன் ரத்து செய்தீர்கள்?

கடந்த இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் 3 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுக்குள் மூன்று லட்சம் கோடி கடன் வாங்கி அதை மக்கள் தலையில் கட்டி விடுவார்கள். இதற்கெல்லாம் நாம்தான் வடிகட்ட வேண்டியதாக இருக்கும். இதற்கு இந்த தேர்தலில் முடிவு கட்டுங்கள்" என ஆவேசமாக பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eps alleged TNGovt brought 3laks Loan in 3 years


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->