மீண்டும் பிரான்சின் அதிபராகும் இமானுவேல் மேக்ரான்.!! - Seithipunal
Seithipunal


பிரான்சில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டத்தின்படி இரண்டு சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் இமானுவேல் மேக்ரான் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 

பிரான்சின் முதல் சுற்று அதிபர் தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. அதில் 4.11 கோடி வாக்காளர்கள் பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் வாக்கு சாவடிகளில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இமானுவல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும்,பெண் வழக்கறிஞரான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. 

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில், மேக்ரான் 58.2  சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 41.8 சதவீத வாக்குகள் பெற்றார். இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக வெற்றி பெற்றுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பல நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emmanuel Macron wins 2nd time


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->