முதலமைச்சர் வீட்டில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை.. அதிமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.? - Seithipunal
Seithipunal


நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னவென்றால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக அளவிளான தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அதற்கு தொண்டர்கள் அனைவரும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உழைக்க வேண்டும்.

மேலும், கட்சியின் நிர்வாக வசதிக்காக பல்வேறு மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாகவும், புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் பாமக, தேமுதிக , பாஜக உள்ளிட்டகூட்டணி கட்சிகள் எவ்வாறு இருக்கிறார்கள். 

தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் பிளவு ஏற்பட்டால் அவர்களுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது. 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்தைக்கு குழு அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாலை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், தலைவர்கள் காரசாரமாக விவாதித்து நிலையில், முதலமைச்சருடன் சில அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலையில் உயர்மட்ட கூட்டத்தில் சில முடிவுகள் எட்டப்படாத நிலையில், இந்த அவசர கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy consultation with admk minister


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->