புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதம்.. தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமி.!  - Seithipunal
Seithipunal


சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் திருவுருவச் சிலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த இழிவான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதில், "அண்ணா திமுகவின் நிறுவனத் தலைவரும் மக்களின் இதயங்களை வென்றவருமான இதயக்கனி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவித்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டுள்ள நபர்களை உடனே கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi palanisamy angry about MGR statue damaging issue 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->