நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்.. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த வேறொரு கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொண்டதால் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் பறிபோனது. 

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வேறொரு சின்னத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. 

இந்த நிலையில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI allocated mic symbol to NTK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->