வேலூர் தொகுதியில் மீண்டும் களமிறங்கும் அமைச்சர் துரைமுருகனின் மகன்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட்டு மே மாதத்திற்குள் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. 

இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வரும் இந்த சூழலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினருமான கதிரானந்த் மீண்டும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்று காலை சென்னையில் உள்ள திமுக வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் துரைமுருகன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் சென்ற கதிரானந்த் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Duraimurugan son Kathir Anand contest in Vellore again


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->