நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவி விலக வேண்டும்! வலுக்கும் எதிர்ப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழக மக்களை வஞ்சிக்கும் விலைவாசி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வுக்கு தார்மீக பொறுப்பேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவி விலக வேண்டும் என யாதவ மகாசபை தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தியுள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என போலி வாக்குறுதிகளை அள்ளி தந்து விட்டு, ஆட்சிக்கு வந்தபின் பொதுமக்களை விலைவாசி உயர்வால் வாட்டி வதைக்கும் திமுக அரசின் செயல் கண்டனத்திற்குரியது. முதலில் சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வை அறிவித்து பொதுமக்களின் வயிற்றில் அடித்தது. அடுத்த கட்டமாக குடிநீர் இணைப்பிற்கான கட்டணத்தையும் இந்த அரசு உயர்த்தியது. தொடர்ந்து மின்சார கட்டணத்தை உயர்த்துவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து ஏழை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். 

இதில் வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசின் விதிகளின் படியே உயர்த்தியதாக கூறியது தான். மத்திய அரசின் வழிகாட்டுதலில், மாநில அரசின் மின்சார வாரியங்களின் நிதி வருவாயை பெருக்கியும், செலவினங்களை குறைத்திடவும் தான் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொள்ளையடிப்பதற்கு வழி தேடிய திமுக அரசோ, இதை காரணம் காட்டி மின்சாரக்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. மக்களிடையே திமுகவிற்கு அவப்பெயர் உண்டாகும் என்பதால் பழியை மத்திய அரசின் மீது போட்டு வேடிக்கை பார்க்கிறது. ஆனால் இதை மக்கள் நம்ப மாட்டார்கள். 

இதே போல்  அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என தமிழகம் சார்பில் பங்கேற்ற மாண்புமிகு அமைச்சர் வழிமொழிந்து விட்டு தற்போது எதுவுமே நடக்காதது போல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆவின் பொருட்கள் மீதான விலையை ஏற்றி 4 மாதங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது ஜிஎஸ்டியை காரணம் காட்டி மீண்டும் விலையை ஏற்றி அப்பாவி மக்களை இந்த அரசு வஞ்சித்து வருகிறது. அவர்கள் கூறுவது போல் விலையை உயர்த்த வேண்டும் என்றால், கூடுதலாக 5 % தான் விலையை ஏற்றியிருக்க வேண்டும். ஆனால் இந்த கொள்ளை அரசு 20 % வரை விலையை உயர்த்தி கொள்ளை அடிக்க முயல்கிறது. 

கொள்ளையடிப்பதற்கும் ஊழல் செய்வதற்கும் வழிகளை தேடும் திமுக, மக்கள் மீது சுமையை சுமத்தி அதை அடைந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் மத்திய அரசின் மீது பழி சுமத்துகிறார்கள். திறமையற்ற நிதி நிர்வாகத்தால் ஏழைமக்களின் வயிற்றில் அடித்து வேடிக்கை பார்க்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr Devanathan yadav oppose hike of Curd ghee prize


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->