வன்னியர் உள்ஒதுக்கீடு : முதலவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகும் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், முதலவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகும் என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "தமிழர் தமிழகத்தில் எம்பிசி 20 சதவீத இட ஒதுக்கிடை பெற்றுக் கொடுத்தது மருத்துவர் அய்யா, பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் தான்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அன்றைய திமுக அரசு வழங்கியது. இந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடக்க காலத்தில் 108 சமுதாயம் இருந்த நிலையில், தற்போது 115 சமுதாயங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளன.

இந்த 115 சமுதாயங்களில் சில சமுதாயங்கள் இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிக எண்ணிக்கையை எடுத்துக் கொள்கின்றனர். அந்த சமுதாயங்கள் சேர்ந்த மக்கள் தொகை பத்தாயிரம், 50,000 தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் 20 இடங்களில் ஐந்து இடங்களை கைப்பற்றிக் கொள்கிறார்கள். 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பெரிய சமூகம் வன்னியர் சமூகம் ரெண்டு கோடி மக்கள் உள்ளனர். அந்த சமுதாயத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 20 இடங்களில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைக்கிறது. இது சமூக அநீதி. 

இதை சரி செய்ய வேண்டும் நோக்கத்தில் நாங்கள் பல போராட்டங்களை கடந்த காலத்தில் நடத்தினோம். அதை ஏற்றுக் கொண்டுதான் கடந்த ஆட்சி காலத்தில் அந்த 20 விழுக்காட்டை மூன்றாக பிரித்தார்கள், பத்து புள்ளி ஐந்து, ஏழு புள்ளி, இரண்டு புள்ளி ஐந்து என்று பிரித்தார்கள். 

அதை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. உச்சநீதிமன்றமும் அதை ரத்து செய்தது. ஆனால் அதில் சென்னை உயர்நீதிமன்றம் 7 காரணங்களில் ஆறு காரணங்கள் தவறானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மீதமுள்ள ஒரே காரணம் தரவுகள் இல்லை, இட ஒதுக்கீடு கொடுத்ததற்கான நியாயமான காரணங்களை கேட்டார்கள். என்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் ஒரு வாரத்தில் இந்த உள் ஒதுக்கீட்டை நியாயப்படுத்த முடியும். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. உண்மையில் இதை செய்ய வேண்டும் என்றால் செய்து இருக்கலாம். 

ஓராண்டு காலம் தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து, பல கோரிக்கைகள், நேரில் சந்தித்து, தொலைபேசி மூலமாக, அமைச்சர்கள், அதிகர்களை சந்தித்தும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் போதுமான வேகம் இல்லை. 

இது வன்னியர்களுக்கான பிரச்சனை மட்டும் இல்லை. 115 சமுதாய மக்களில் மற்ற சமூக மக்களுக்கும் இதில் அநீதி நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மீனவர் சமுதாயம் அநீதியை சந்தித்து வருகின்றனது.

இந்த 115 சமுதாயத்தில் உள்ள மக்களில் ஒரு சில சமுதாய மக்களே பெரும்பான்மையான இடங்களை எடுத்து செல்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலமாக 20% இட ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்கள் எந்தெந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற புள்ளி விவரத்தை எடுத்தால் போதும். பல்கலைக்கழகங்களில் எத்தனை பேருக்கு? எந்த சமுதாயத்தில் எத்தனை பேருக்கு பணி கிடைத்துள்ளது என்ற புள்ளி விவரத்தை எடுத்தால் போதும்.

இது ஒரு பெரிய விஷயமே இல்லை. இதனை எடுத்துக் கொண்டு சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றிவிடலாம். இதை செய்வதற்கு ஒரு வருஷம் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. தேவையே இல்லை. முதலமைச்சர் அவர்கள் எங்கள் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Vanniyar Reservation issue 01032023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->