மீண்டும் 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும் தெரியுமா? - நல்ல செய்தி சொன்ன அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


இன்னும் ஆறு மாதத்தில் 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பாமகவின் புத்தாண்டு பொதுக்குழுவில் இதனை அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 

பொதுக்குழுவில் அவர் பேசியதாவது, "நாம் வன்னியர் சமுதாயத்தை பற்றி பேசினால், சாதி பற்றி பேசுகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் தற்போது எடுபடுவதில்லை.  தமிழகத்தில் இரண்டு பெரிய சமுதாயம் உள்ளது. ஒன்று தாழ்த்தப்பட்ட சமுதாயம், இன்னொன்று வன்னியர் சமுதாயம். இங்ரக இரண்டு சமுதாயமும் 40 விழுக்காடு உள்ளனர். இந்த இரண்டு சமுதாயமும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேற்ற முடியும். இது இதுதான் அடிப்படை. இந்த இரண்டு சமுதாயத்திற்காகவும் மருத்துவர் அய்யா அவர்கள் எத்தனையோ போராட்டங்களை செய்துள்ளார்கள். 

அதில்,  தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அனைத்து இட ஒதுக்கீடுகளை உள்ளது. தற்போது அவர்கள் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் இன்னும் முன்னேற வேண்டும். ஆனால் இன்னொரு பெரிய சமுதாயம் அதல பாதாளத்தில் உள்ளது. 

முன்னேற்றம் கிடையாது, மது பழக்கம் வேரூன்றி இருக்கிறது, வேலை வாய்ப்பு இல்லை இவ்வளவு பிரச்சனைகள் வன்னியர் சமுதாயத்தில் உள்ளது. இதற்கெல்லாம் தீர்வு வேண்டும் என்பதற்காகத்தான் நாற்பத்தி மூன்று ஆண்டுகளாக மருத்துவர் அய்யா போராடினார்.

எப்படியாவது வன்னியர் சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும் என்று, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மருத்துவர் அய்யா முக்கிய முடிவு எடுத்தார்கள். 

தமிழகம் தழுவிய பலகட்ட போராட்டம், அழுத்தம் காரணமாக வன்னியர்களுக்கு 10.5% சதவீத உள் இட ஒதுக்கீடாக கிள்ளி கொடுத்தார்கள். உண்மையில் நாம் கேட்டது 20% இட ஒதுக்கீடு. கூட்டணி அமைத்ததே அந்த ஒரு காரணத்திற்காக தான். 

பிறகு கடைசி நேரத்தில் கிடைத்தது. தேர்தல் நடந்தது, வழக்குகள் வந்தது, அந்த இட ஒதுக்கிடையே ரத்து செய்தார்கள். நல்ல வாய்ப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு நமக்கு சாதகமாக இல்லை என்றாலும், அதில் உள்ள அம்சங்கள் நமக்கு சாதகமாக உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்வதற்கு முன் வைத்த ஏழு காரணங்களில், ஆறு காரணங்கள் செல்லாது என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. ஒன்று மட்டும் தரவுகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது. 

ஆனால் உண்மையில் அனைத்து விதமான தரவுகளும் இருந்தது. சட்டநாதன் கமிஷன், அம்பாசங்கர் கமிஷன், ஜனார்த்தனன் கமிஷன், தணிக்கச்சலம் கமிஷன் தரவுகள் உட்பட அனைத்து தரவுகளையும் கொடுத்தோம். ஆனால் அதை உச்சநீதி மட்டும் கவனிக்கவில்லை. அதனால் இட ஒதுக்கீடு ரத்து செய்தார்கள். 

தற்போது மீண்டும் வன்னியர்களின் 10.5% சதவீத இட ஒதுக்கீடு வரவேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை தமிழக முதல்வரிடம் பேசியுள்ளார். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர்கள் ஜிகே மணி உள்ளிட்டவர்கள் பலமுறை தமிழக முதல்வரிடம் பேசியிருக்கிறார்கள். நானும் பலமுறை பேசி இருக்கிறேன். இது ஜாதிப் பிரச்சனை கிடையாது. இது ஒரு சமூக நீதிப் பிரச்சனை. 

நான் ஒரு கிராமத்திற்கு சென்றால், எப்போதையா 10.5% சதவீத இட ஒதுக்கீடு நமக்கு கிடைக்கும் என்று கேட்கிறார்கள்? அவ்வளவு ஆர்வமாக உள்ளார்கள். இது குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியாக நிச்சயம் வரும். இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு சட்டம் வரும். கண்டிப்பாக வர வேண்டும். அதற்கு ஏற்ப முயற்சிகள் நடந்து வருகிறது." என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About vanniyar reservation 3012


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->