ஏக்கருக்கு ரூ.8000 இழப்பீடு போதாது; ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8000 இழப்பீடு போதாது; ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த  நெற்பயிர்களுக்கு நிபந்தனைக்குட்பட்டு ஏக்கருக்கு ரூ.8000,  பயறு வகைகளுக்கு ரூ.1200  இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கான இழப்பீடு  அதன் உரச் செலவுகளுக்கும், பயறுக்கான இழப்பீடு விதை செலவுகளுக்கும் கூட போதாது.

ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்வதற்கு ரூ.46,635 செலவாகும் என தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் பல்கலைக்கழகமே மதிப்பீடு செய்துள்ள நிலையில்,  அதில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக இழப்பீடு வழங்குவது நியாயமல்ல. இதனால் உழவர்களுக்கு பயனில்லை!

33%க்கும் கூடுதலாக மகசூல் இழப்பு ஏற்பட்ட நெற்பயிர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது அநீதி.  பேரிடர் மேலாண்மை விதிகள் தான் இந்த அநீதிக்கு காரணம்  என்றால் அவற்றை திருத்தியமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிபந்தனையின்றி ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.50,000 வீதமும், பயறு வகைகள் மற்றும் உளுந்துக்கு ஏக்கருக்கு ரூ.15,000 வீதமும் இழப்பீடு வழங்க வேண்டும். அதன் மூலம் காவிரி பாசன பகுதி உழவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say about paddy farmers relief fund 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->