#Breaking : பாமக போராட்டம்., சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாமகவினர் தமிழகம் முழுவதும் இன்று சென்னையை நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர். பாமகவினர் கார்களிலும். பேருந்துகளிலும். இரு சக்கர வாகனங்களிலும். வேன்களிலும் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். சென்னையின் 8 நுழைவாயிலில் 5,000 போலீசார் குவிக்கப்பட்டு பாமகவினரை தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். சிலர் ஒரு சில இடங்களில் கைது நடவடிக்கையும் போலீசார் எடுத்து உள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்ததாவது, "பாமக 40 ஆண்டு காலமாக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி கேட்டு வருகிறது. மருத்துவர் ராமதாஸ் பல போராட்டங்களை இதுகுறித்த நடத்தியுள்ளார்.

இது யாருக்கும் எதிரான போராட்டம் கிடையாது. எங்களது தொண்டர்கள் வருகையில் நேற்று இரவு காவல் துறையினர் திடீர் என ஆங்காங்கே நிறுத்தி உள்ளனர். எங்களை அப்படியே விட்டிருந்தால் சென்னையில் ஒரு பகுதியில் போராட்டம் நடத்தி, அப்படியே கலைந்து இருப்போம்.

காவல்துறை வேண்டுமென்று அங்கு தடுத்து நிறுத்தியதால், பல பிரச்சினைகள் தற்போது எழுந்துள்ளது. வேண்டும் என்று இடை நிறுத்தப்பட்டு உள்ளனர். மதியம் ஒன்றரை மணிக்கு தமிழக முதல்வர் எங்களை அழைத்துள்ளார். அவரிடம் எங்களின் கோரிக்கை குறித்து பேச உள்ளோம். 

பாட்டாளி மக்கள் கட்சியினர் அமைதியாக இருக்கவேண்டும். எங்கும் எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது." என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss press meet dec 1


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->