திமுக-விசிக கூட்டணியில் விரிசல்? தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திடீர் ரத்து.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தனி தொகுதி மற்றும் ஒரு பொது தொகுதி ஒதுக்க வேண்டும் என தனது நிபந்தனையை திமுக தொகுதி பங்கீடு குழுவிடம் ஏற்கனவே கூறிவிட்டது.

ஆனால் இரண்டு துணி தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தரப்பு காரராக தெரிவித்ததாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

விசிகாவுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையாளுத்தாகும் என்ற நம்பிக்கையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று அறிவாலயம் வந்திருந்தார்.

ஆனால் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என காரணம் காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை புறக்கணித்துள்ளார்.திருமாவளவனின் இந்த நடவடிக்கை திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சலசலப்பக்கு மத்தியில் இன்று மாலை திமுகவுடன் விசிக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Vck seat share talk cancelled


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->